×
Saravana Stores

பூந்தமல்லி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு

 

பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா இயக்கம் குறித்த விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நிகழ்ச்சி நேற்று நடந்தது.  ஒன்றிய அரசால் கடந்த 15ம் தேதி முதல் அடுத்த மாதம் 2ம் தேதி வரை ‘ஸ்வச்சதா ஹி சேவா’ பிரசாரம் நடத்தப்படுகிறது. ‘குப்பை இல்லாத இந்தியா’ எனும் கருப்பொருளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் தூய்மை பணிகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.

அதன் தொடர்ச்சியாக ‘ஸ்வச்சதா ஹி சேவா’ என்னும் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பூந்தமல்லி நகராட்சியில் இன்று முதல் வரும் 2ம் தேதி வரை தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதன்படி நேற்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி அலுவலகம் முன்பு மனிதச் சங்கிலி பிரசாரம் நடைபெற்றது.

இதில் நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் லதா மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். மனித சங்கிலியில் பங்கேற்றவர்கள் குப்பை இல்லா நகரம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி நின்றனர். தொடர்ந்து நகராட்சி வளாகத்தில் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பூந்தமல்லி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Clean India ,Poonamallee Municipality ,Poontamalli ,Poontamalli municipality ,Swachh India movement ,Swachada Hi Seva ,Union Government ,Dinakaran ,
× RELATED வந்தவாசியில் நாய்களை கட்டுப்படுத்த...