- திருத்தணி - நாகலாபுரம் நெடுஞ்சாலை
- திருத்தணி
- திருத்தணி – நாகலாபுரம்
- திருத்தணி - நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலை
- நெமிலி காலனி
- திருவள்ளூர் மாவட்டம்
- திருவல்லாங்காடு
- திருத்தணி - நாகலாபுரம் நெடுஞ்சாலை
திருத்தணி: திருத்தணி – நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் உயிர்ச் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே நெமிலி காலனிக்கு அருகில் திருத்தணி- நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில் ஏரிக்கரை அமைந்துள்ளது. இந்த ஏரியின் அருகில் 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்களில் உயர் அழுத்த கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இந்த மின் கம்பிகள் கை தூக்கினால் தொடும் அளவில் தாழ்வாக உள்ளன.
இந்த சாலையில் தினமும் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் சென்று வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் அப்பகுதியில் தெரு விளக்குகள் எரியாததால், ஏரிக்கரை பகுதியில் சென்று வர பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். தாழ்வாக விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள மின் கம்பிகளை சீரமைத்து, மின் விளக்குகள் பொருத்த மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெமிலி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருத்தணி-நாகலாபுரம் நெடுஞ்சாலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் மக்கள் அச்சம் appeared first on Dinakaran.