- கணினி
- அறிவியல் சங்கம்
- தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி
- காஞ்சிபுரம்
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- சைபர் செக்யூரிட்டி) சமூகம்
- தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- மாமல்லபுரத்தில்
- கல்லூரி
- டீன் கோவர்தன்
- கல்லூரி இயக்குனர்
- பி.மணி
- கணினி அறிவியல் சங்கம்
காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (சைபர் பாதுகாப்பு) சங்கம் தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. கல்லூரி டீன் கோவர்தன் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் பி.மணி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக டிஎச்எல் தகவல் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகாரி ராம் பிரகாஷ் சுப்பிரமணியன் கலந்துகொண்டு, டீ வேப்ஸின் அடிப்படையில் கருத்துகள், நடப்பு சூழல் சூழ்நிலையில் அதனுடைய அம்சங்கள் மற்றும் பயன்பாடுகள் தொழில்நுட்ப துறையில் அதனுடைய தாக்கங்கள் குறித்து விரிவாக பேசினார்.
மேலும், விழாவில் துறை சங்கத்தின் சம்பந்தப்பட்ட சிறப்புகள், செயல்பாடுகள் மற்றும் திட்ட வழிமுறைகள் பற்றியும் விளக்கப்பட்டது. பரிசுகளும் வழங்கப்பட்டன. ஆய்வு கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. முன்னதாக தர்ஷினி வரவேற்பு பேசினார். முடிவில் விக்ரம், தேவிப்பிரியா நன்றி கூறினர்.
The post தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் கணினி அறிவியல் சங்கம் தொடக்கம் appeared first on Dinakaran.