×

பிடிஓ அலுவலகத்தில் பயன்படாமல் கிடக்கும் ஆட்டோக்களை உடனே வழங்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பிடிஓ அலுவலக வளாகத்தில் ஊராட்சிகளுக்கு வழங்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களை உடனே வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் பிடிஒ அலுவலக வளாகத்தில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் 15வது நிதிக்குழு மானியம்-ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஊராட்சிகளுக்கு குப்பைகளை அகற்ற மின்கல ஆட்டோக்கள் பிடிஓ அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆட்டோக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்கப்படாமல் பிடிஓ அலுவலக வளாகத்தில் அப்படியே வைக்கப்பட்டுள்ளதால், இந்த ஆட்டோக்கள் வெயிலிலும், மழையிலும் கிடந்து வீணாகின்றன. அவற்றை விரைவில் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக அவர்கள் கூறுகையில், ஊராட்சிகளில் குப்பைகளை சேகரிக்க மின்கல ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆட்டோக்கள் பெரியபாளையம் பிடிஓ அலுவலக வளாகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வைக்கப்பட்டன. இது மழையிலும் வெயிலிலும் காய்ந்து துருப்பிடிக்கும் நிலையில் உள்ளது. எனவே இந்த ஆட்டோக்களை சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு விரைவில் வழங்க வேண்டும் என்றனர்.

The post பிடிஓ அலுவலகத்தில் பயன்படாமல் கிடக்கும் ஆட்டோக்களை உடனே வழங்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : PTO ,Oothukottai ,Ellapuram Union ,Periyapalayam PTO ,Swachh Bharat movement ,15th ,
× RELATED பெரியபாளையம் குருவாயல் கிராமத்தில்...