தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு…
பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 2
ஏலக்காய் – 3
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 1/2 கப்
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 இன்ச் (துருவியது)
பச்சை மிளகாய் – 3 (கீறியது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு – சுவைக்கேற்ப
கறிவேப்பிலை – 3 கொத்து
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
எலும்பில்லாத சிக்கன் – 1/4 கிலோ
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், மிளகு சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர்ஜாரில் போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு, துருவிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.* பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து, சின்ன வெங்காயத்தையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.அதன் பின் கறிவேப்பிலை சேர்த்து, அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை பொடி மற்றும் மல்லித் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.அடுத்து எலும்பில்லாத சிக்கனை நீரில் கழுவி, அதை வாணலியில் சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால், சுவையான கறிவேப்பிலை சிக்கன் சுக்கா தயார்.
The post சிக்கன் சுக்கா appeared first on Dinakaran.