×
Saravana Stores

சென்னையில் குமரகுருபரன் தலைமையில் 2025ம் ஆண்டிற்கான வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்புப் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம்..!!

சென்னை: சென்னையில் குமரகுருபரன் தலைமையில் 2025ம் ஆண்டிற்கான வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்புப் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட16 சட்டமன்றத் தொகுதிகளின் 2025ஆம் ஆண்டிற்கான வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் குமரகுருபரன், இ.ஆ.ப., தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (16.09.2024) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

வாக்காளர் பட்டியலை பொதுமக்களின் பங்களிப்புடன் கூடிய வகையில் சரியான முறையிலும், ஆரோக்கியமான வகையிலும் தயாரிக்கும் பெரு முயற்சியால் இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 1, 2025 யை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது. இதன் முன்திருத்த பணிகளான வாக்குசாவடியின் புதிய பாகங்கள் அமைத்தல், பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல், வாக்குசாவடியை இடமாற்றம் செய்தல், வேறு கட்டிடங்களுக்கு இடமாற்றம் செய்தல் மற்றும் வாக்குச்சாவடி பெயர் திருத்தம் செய்தல் போன்ற மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதியிலும் கடந்த 29.08.2024 அன்று வரைவு வாக்குச்சாவடி பட்டியல் ஆனது வாக்காளர் பதிவு அதிகாரியால் வெளியிடப்பட்டது. மேலும் வாக்குச்சாவடி மறுசீரமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றது. அவற்றின்படியும் வாக்காளர் பதிவு அதிகாரி மற்றும் துணை வட்டாட்சியர் (தேர்தல்கள்) கொண்ட கள ஆய்வின்படியும் வாக்குச்சாவடிகளில் மற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள 3719 வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்ததில் தேவைக்கேற்ப புதியதாக 3 வாக்குச்சாவடிகளை உருவாக்கம் செய்யவும்.

33 வாக்குச்சாவடிகளில் பிரிவு மாற்றம் செய்யவும், 4 வாக்குச்சாவடிகளை இணைக்கவும், 78 வாக்குச்சாவடிகளை கட்டிட மாற்றம் செய்யவும் மற்றும் 3 வாக்குச்சாவடிகளை பெயர் மாற்றம் செய்யும் பொருட்டு சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரி அவர்களிடமிருந்து அறிக்கை வரப்பெற்றுள்ளது. இம்மாறுதலுக்கு பின்பு, சென்னை மாவட்டதிற்குட்டபட்ட 16 சட்டமன்ற தொகுதிகளின் மொத்த வாக்குச்சாவடி மையங்கள் எண்ணிக்கை 3718 ஆகும். மேலும் 01.01.2024 அன்று தகுதி நாளாக கொண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள், 2025 தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் ஆனது வருகின்ற 29.10.2024 அன்று வெளியிடப்பட உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) பி.சுரேஷ், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னையில் குமரகுருபரன் தலைமையில் 2025ம் ஆண்டிற்கான வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்புப் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Kumaraguruparan ,Chennai ,Election Commission of India ,
× RELATED வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய...