டெல்லி: மோடி அரசு தோற்றுவிட்டதாக காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ரயில் பயணம் என்பது தொடர் விபத்துகளால் பலி பீடமாக்கப்பட்டு வருகிற செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரத்தின்படி கடந்த 10 ஆண்டுகளில் பலவிதமான ரயில் விபத்துகளில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியின் அலட்சிய போக்கினால் ரயில்வே துறை சீரழிந்ததைப் போல எந்த ஆட்சிக் காலத்திலும் நிகழ்ந்ததில்லை என காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
Modi Govt= Zero Accountability pic.twitter.com/acNPb759zu
— Congress (@INCIndia) September 16, 2024
இந்நிலையில் மோடி அரசு தோற்றுவிட்டதாக காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள பதிவில்; 3வது முறை ஆட்சியில் பிரதமர் மோடியின் அரசு தோற்றுவிட்டது. பிரதமர் மோடியின் முதல் 100 நாள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள், 21 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
The post 100 நாள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள், 21 உயிரிழப்பு: மோடி அரசு தோற்றுவிட்டதாக காங்கிரஸ் விமர்சனம் appeared first on Dinakaran.