×
Saravana Stores

கச்சா எண்ணெய் விலை 32% குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? : ஒன்றிய அரசுக்கு கார்கே கேள்வி

டெல்லி : கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கச்சா எண்ணெய் விலை 32% குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்தபோதிலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கிறது ஒன்றிய அரசு.

மே 16, 2014 (டெல்லி) –

கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு $107.49
பெட்ரோல் – ரூ.71.51
டீசல் – ரூ.57.28

செப்டம்பர் 16, 2024 அன்று –

கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு $72.48,
பெட்ரோல் – ரூ.94.72
டீசல் – ரூ.87.62

தற்போதைய சந்தை நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.48.27-க்கு விற்கப்பட வேண்டும். தற்போதைய சந்தை நிலவரப்படி டீசல் ஒரு லிட்டர் ரூ.69-க்கு விற்கப்பட வேண்டும். மோடி ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் மற்றும் 100 நாட்கள் ஆகிவிட்டன. மோடி ஆட்சியில் மக்களிடம் இருந்து எரிபொருள் வரியாக மட்டும் ரூ.35 லட்சம் கோடியை ஒன்றிய அரசு வழிப்பறி செய்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத பாஜகவையும் மோடி அரசையும் தேர்தலில் மக்கள் நிராகரிப்பார்கள்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் வெளியிட்டுள்ள செய்தியில்,”சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளபோதும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? . கச்சா எண்ணெய் விலை சரிவால் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் லாபம் அடைகின்றன; ஆனால் அதன் பலன் சாதாரண மக்களுக்கு கிடைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளபோதும் பெட்ரோல் விலை 30% அதிகரிப்பு,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கச்சா எண்ணெய் விலை 32% குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? : ஒன்றிய அரசுக்கு கார்கே கேள்வி appeared first on Dinakaran.

Tags : Carke ,EU government ,Delhi ,Congress ,President ,Mallikarjuna Karke ,BJP ,Karke ,Dinakaran ,
× RELATED ஆட்சியை கவிழ்க்க ஆடுகளை போல்...