- அண்ணா
- நெல்லை
- பேரறிஞர் அண்ணா
- திமுக
- நெல்லை சந்தி
- நெல்லை மத்திய மாவட்டம்
- டிபிஎம் மைதீன்கான்
- நெல்லை...
- நெல்லை அண்ணா
- தின மலர்
நெல்லை : பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாளையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான் தலைமையில் கட்சியினர் மாலையணிவித்தனர். நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், தேவாலய உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய தலைவர் விஜிலாசத்யானந்த், சட்டத்திருத்தக்குழு சுப.சீதாராமன், வர்த்தக அணி இணை செயலாளர் மாலைராஜா, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அருள்இளங்கோ, கல்விக்குழு சேர்மன் டாக்டர் சங்கர், மாவட்ட துணை செயலாளர் எஸ்வி.சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் பிஎம்.சரவணன், பகுதி செயலாளர்கள் துபை சாகுல், நமச்சிவாயம், வக்கீல் அணி மாவட்ட தலைவர் ராஜாமுகம்மது, கவுன்சிலர்கள் கந்தன், ஆமீனாசாதிக், உலகநாதன், சகாயஜூலியட்மேரி, கோகுலவாணி, வில்சன் மணித்துரை, சுந்தர், வட்ட செயலாளர்கள் பேபி கோபால், ஆவின் கல்யாணி, மேகை செல்வம், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பலராமன், விவசாய தொழிலாளர் அணி கருப்பசாமி, அருள்ராஜா, ஐஸ் முருகன், இளைஞரணி மீரான் மைதீன், மகளிரணி அனிதா, திராவிட மணி, துரையரசன், இம்மானுவேல், முறுக்கு சாகுல், ஷேக் உஸ்மானி, டாஸ்மாக் தங்கராஜ், மில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை தொகுதி எம்எல்ஏ அப்துல் வகாப் தலைமையில் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், மூத்த நிர்வாகி பத்தமடை பரமசிவம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி, டவுன் பகுதி பொருளாளர் அப்துல்சுபுஹானி, மாவட்ட துணைச் செயலாளர்கள் மூளிக்குளம் பிரபு, சுரேஷ், கவுன்சிலர்கள் கந்தன், ராஜேஸ்வரி, ஷேக்பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், முன்னாள் எம்பி முத்துகருப்பன், சிறுபான்மை பிரிவு மாநில இணைச் செயலாளர் மகபூப் ஜான், அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், மாவட்ட துணைச் செயலாளர் பள்ளமடை பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து கழக மண்டல செயலாளர் சண்முகவேலன், மண்டல நிர்வாகிகள் வேல்பாண்டி, பகவதிமுருகன், நாட்டரசன், சாகுல்ஹமீது, பகுதி செயலாளர்கள் காந்தி வெங்கடாச்சலம், மோகன், ஜெ. பேரவை சீனிமுகம்மதுசேட், அத்திமேடு லெட்சுமிகாந்தன், ஏஎல்.சேகர், வக்கீல் ஜோதிமுருகன், வட்ட செயலாளர்கள் பாறையடி மணி, வெள்ளரி அய்யப்பன், நத்தம் வெள்ளப்பாண்டி வண்ணை கணேசன், பூக்கடை சப்பாணிமுத்து மற்றும் பால்கண்ணன், தச்சை மாதவன், அரசு விரைவு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் பார்வதி நாதன், பொருளாளர் அய்யப்பன், சிலம்பு மாரிமுத்து, மத்திய தொழிற்சங்கம் அப்துல் மாலிக், தங்கபிச்சையா, குறிச்சி சேகர், தானேஸ்வரன், மானூர் முத்துமாரியப்பன், கவுன்சிலர் சந்திரசேகர், அப்துல்அஜிஸ், ஸ்டார் அய்யப்பன், கபாலி, வேலம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமமுக சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமையில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆவின் அண்ணாச்சாமி, ஜெ. பேரவை இணைச் செயலாளர் ஆறுமுகசுவாமி, இளைஞர் பாசறை பொருளாளர் முருகன், மாநகர் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் மாரியப்பன், சட்டமன்ற பொதுக்குழு உறுப்பினர் மணிமூர்த்தீஸ்வரம் ஆறுமுகம், சார்பு அணி செயலாளர்கள் தங்கபாண்டியன், அரியகுளம் மந்திரமூர்த்தி, இசக்கிராஜா, ஜீனத் ராணி, ஆதிகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் சீனிவாசன், சின்னதுரை, அசன்கான், பரமசிவம், அசல் எம்.சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் வைகுண்டராஜா, ராஜசேகர், சுரேஷ், பிரகலாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post 116வது பிறந்த நாள் நெல்லையில் அண்ணா சிலைக்கு கட்சியினர் மரியாதை appeared first on Dinakaran.