புதுடெல்லி: இந்தியாவில் பயிற்சி பெற தகுதியுடைய அனைத்து எம்பிபிஎஸ் மருத்துவர்களும் தேசிய மருத்துவ பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது. ஏற்கனவே இந்திய மருத்துவ பதிவேட்டில் பதிவு செய்தவர்களும் தேசிய மருத்துவ பதிவேட்டில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பதிவு செய்வதற்கான நடைமுறை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ பதிவேட்டில் பதிவு செய்ய மருத்துவர்களுக்கு அவர்களின் ஆதார் அடையாள எண்கள், எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் டிஜிட்டல் நகல் உள்ளிட்டவை தேவை. இதில் பதிவு செய்த அனைவருக்கும் பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து்ள்ளது.
The post டாக்டர்களுக்கு பிரத்யேக அடையாள அட்டை appeared first on Dinakaran.