×

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல்: ஒருவர் காயம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 360 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. இரவு தனுஷ்கோடி அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படை, மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் வேறு பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர்.

தொடர்ந்து சிறிய ரக படகுகளில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியதால் மீன்பிடி வலைகளை வெட்டி விட்டு கடற்படையிடம் இருந்து மீனவர்கள் தப்பினர். மேலும் மீனவர்களை விரட்டி வந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கையில் பலத்த காயம் அடைந்தார். இதனால் நள்ளிரவு கடலில் மீனவர்களிடையே பதற்றம் ஏற்பட்டது. நேற்று காலை கரை திரும்பிய மீனவர்கள் வலையில் சுமாரான மீன்கள் கிடைத்ததால் நஷ்டத்தில் இருந்து தப்பித்தனர்.

The post இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல்: ஒருவர் காயம் appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Rameswaram stone pelting ,Rameswaram ,Dhanushkodi ,
× RELATED நடுக்கடலில் 2 விசைப்படகுகளுடன்...