×
Saravana Stores

இந்தியும் மற்ற மொழிகளும் நண்பர்கள்தான்: அமித் ஷா சொல்கிறார்

புதுடெல்லி: நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டதை நினைவுகூறும் வகையில் ஆண்டு தோறும் இந்தி மொழி நாள் (இந்தி திவாஸ்) கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையொட்டி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், ‘‘இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டை வைர ஆண்டாக நாடு கொண்டாட உள்ளது. 75 ஆண்டுகளில் இந்தி பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. ஆனால் எந்த உள்ளூர் மொழியுடனும் இந்திக்கு போட்டி இல்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும். அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஒரு நண்பன். அவை ஒன்றை ஒன்று முழுமையாக்குகின்றன. ஒவ்வொரு மொழியும் இந்தியை வலுவாக்குகின்றன. இந்தி ஒவ்வொரு மொழியையும் வலுவாக்குகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post இந்தியும் மற்ற மொழிகளும் நண்பர்கள்தான்: அமித் ஷா சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,New Delhi ,Day ,Diwas ,Union Home Minister ,India ,
× RELATED பயங்கரவாதம் இல்லாத இந்தியா; ஒன்றிய அரசு உறுதி; அமித்ஷா