×
Saravana Stores

தேர்வுக்கும், ரிசல்ட்டுக்கு இடையே உள்ள காலத்தை குறைக்க நடவடிக்கை குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் பேட்டி

சென்னை: தமிழகம் முழுவதும் குரூப்-2, 2ஏ பதவிக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் எஸ்.கே.பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நடந்துள்ளது. தேர்வு முடிந்த 6 வேலை நாட்களில் தற்காலிக விடைக்குறிப்புகள்(ஆன்சர் கீ) வெளியிடப்படும். அதில் தேர்வர்கள் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம். அதன் பின்னர் நிபுணர்கள் குழு ஆராய்ந்து இறுதி விடைக்குறிப்புகள் வெளியிடப்படும். அதன் பின்னர் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கும்.

திருத்தும் பணி குறைந்தது 2 மாதங்கள் நடைபெறும். 2 அல்லது 3 மாதங்களுக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட்டு, அடுத்ததாக முதன்மை தேர்வை நடத்துவோம். விரைந்து விடைத்தாள்களை திருத்துவதற்காகவும், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளில் ‘’ஸ்கேனிங்’’ மிஷின், பயிற்சி பெற்ற நிபுணர்களை கூடுதலாக ஈடுபடுத்தியுள்ளோம். விரைவாக தேர்வு முடிவுகளை வெளியிடுவோம். குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்படாது. வேகமாக திருத்தும் பணி நடக்கிறது. தேர்வர்கள் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதால், சற்று நேரம் எடுக்கிறது. விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

டிஎன்பிஎஸ்சி ஓராண்டு கால அட்டவணையில் இந்த ஆண்டு 10 தேர்வுகளை நடத்த திட்டமிட்டு இருந்தோம். அதில் 8 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அதில் சிலவற்றுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மற்றவைகளுக்கு தேர்வு நடைபெற உள்ளன. மீதமுள்ள 2 தேர்வுகளுக்கும் விரைவில் அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வையும் திட்டமிட்டப்படி நடத்தி முடிப்போம். இந்த ஆண்டில் இதுவரை நடத்தி முடிக்கப்பட்ட தேர்வு மூலம் 10 ஆயிரத்து 315 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியிருக்கிறோம். நடந்து முடிந்த, நடைபெற உள்ள தேர்வுகள் மூலம் 10 ஆயிரத்து 872 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளன.

The post தேர்வுக்கும், ரிசல்ட்டுக்கு இடையே உள்ள காலத்தை குறைக்க நடவடிக்கை குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : TNPSC ,SK Prabhakar ,Chennai ,Tamil Nadu ,DNPSC ,Egmore State Girls Higher Secondary School ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி தேர்வு தகவல்களை டெலிகிராம் சேனலிலும் அறியலாம்