×

இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட உறவால் அயோத்தி ராமர் கோயிலில் பணியாற்றும் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 9 பேரில் 5 குற்றவாளிகள் கைது

அயோத்தி: இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட உறவால் அயோத்தி ராமர் கோயிலில் பணியாற்றும் இளம்பெண் சிலரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்திருக்கும் ராமர் ஜென்மபூமி கோயில் வளாகத்தில் துப்புரவுப் பணியாளராகப் இளம்பெண் பணியாற்றி வந்தார். அவர் இளைஞர் ஒருவருடன் நட்பாக பழகி வந்தார். பின்னர் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்துக் கொண்டனர். இந்த நிலையில் தனது காதலனை சந்திப்பதற்காக சென்ற போது, காதலனும் அவனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டல்களை செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பியோட முயன்றபோது, அந்தப் பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

பின்னர் அந்தப் பெண்ணை தாக்கி, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். தொடர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை எடுத்து, அவ்வப்போது அந்தப் பெண்ணை பிளாக்மெயில் செய்து வந்தனர். மேலும் மீண்டும் மீண்டும் போன் செய்து அந்தப் ெபண்ணை மீண்டும் பாலியல் உறவுக்கு அழைத்துள்ளனர். அச்சம் காரணமாக இதுபற்றி வீட்டிலோ, போலீசாரிடமோ அந்தப் பெண் கூறவில்லை. ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணுக்கு அவர்கள் நெருக்கடி கொடுத்ததால் மகளிர் போலீசில் அந்தப் பெண் புகார் கொடுத்தார். தொடர் விசாரணைக்கு பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமைறைவாக இருக்கும் மேலும் 4 பேரை தேடி வருவதாக அயோத்தி சிட்டி எஸ்பி மதுவன் சிங் கூறினார்.

The post இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட உறவால் அயோத்தி ராமர் கோயிலில் பணியாற்றும் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 9 பேரில் 5 குற்றவாளிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Ayodhi Ram Temple ,Ayodhya ,Ayoti Ramar Temple ,Ramar Jenmaphumi ,temple ,Ayothi, Uttar Pradesh ,
× RELATED உடல் நலக்குறைவு காரணமாக பாஜ மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி