- சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில்
- சுசீந்திரம்
- Susindram
- தாணுமாலயன் சுவாமி கோவில்
- சாமி
- Suseenthram
சுசீந்திரம், செப்.14: சுசீந்திரத்தில் பிரசித்திபெற்ற தாணுமாலயன் சுவாமி கோயில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு இங்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோயிலில் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்களை 2 மாதத்துக்கு ஒருமுறை திறந்து காணிக்கை பணத்தை எண்ணுவது வழக்கம். அந்த வகையில் நேற்று காலை இந்த 11 உண்டியல்களையும் கோயில்களின் இணை ஆணையர் பழனி குமார், இந்து சமய அறநிலை துறை அறங்காவல் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறங்காவல் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், கோயில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் திறந்து கோயில் ஊழியர்கள் எண்ணினர். இதில் வருவாயாக 10 லட்சத்து 81 ஆயிரத்து 63 ரூபாயும், 5 கிராம் தங்கம், 8 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைத்தன.
The post சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ₹10.81 லட்சம் உண்டியல் வசூல் appeared first on Dinakaran.