×
Saravana Stores

சிறையில் இருந்து வெளியே வந்தார் கெஜ்ரிவால்: கொட்டும் மழையிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

 

டெல்லி: 6 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருந்து விடுதலையானார். மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜூலை 12ம் தேதியும் சிபிஐ வழக்கில் இன்றும் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது. அமலாக்கத்துறை, சிபிஐ கைது செய்த 2 வழக்குகளிலும் ஜாமின் கிடைத்துள்ளதால் திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் விடுதலையானார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் 6 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலையானார். 155 நாட்களுக்கு பின்னர் சிறையில் இருந்து வெளியே கெஜ்ரிவால் வந்தார். டெல்லியில் பெய்துவரும் மழையை பொருட்படுத்தாமல் தொண்டர்கள் திரண்டு கெஜ்ரிவாலுக்கு வரவேற்பு அளித்தனர். மேலும் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

சிறையில் இருந்து வெளியே வந்த அர்விந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது; கடவுள் என்பக்கம் இருக்கிறார்; நான் நேர்மையானவன். சிறை வைப்பதன் மூலம் என்னை ஒடுக்க நினைத்தனர்; முன்பை விட 100 மடங்கு வலிமையோடு உள்ளேன்.

The post சிறையில் இருந்து வெளியே வந்தார் கெஜ்ரிவால்: கொட்டும் மழையிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Dikar ,Department of Enforcement ,Dinakaran ,
× RELATED நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்