×
Saravana Stores

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே லாரி மீது பேருந்து மோதியதில் 8 பேர் உயிரிழப்பு: 30க்கும் மேற்பட்டோர் காயம்!!

அமராவதி: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மொகிலி காட் அருகே லாரி மீது ஆந்திர அரசு பேருந்து மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் பலமனேரு நகரில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று சித்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது சித்தூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மொகிலி மலைப்பாதை பகுதியில் ஆந்திர மாநில அரசு பேருந்து கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்; காயம் அடைந்தவர்களுக்கு சித்தூர் மற்றும் பலமனேர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த இடத்தில் போக்குவரத்து பாதிப்பு வாகன போக்குவரத்தை போலீசார் சரி செய்து வருகின்றனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே லாரி மீது பேருந்து மோதியதில் 8 பேர் உயிரிழப்பு: 30க்கும் மேற்பட்டோர் காயம்!! appeared first on Dinakaran.

Tags : Chittoor ,Andhra Pradesh ,Amaravati ,Andhra government ,Mohilighat ,Chittoor district ,Palamaneru ,Andhra ,
× RELATED விளையாட்டு வீரர்களுக்கு...