×

சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியது மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி. அம்மா உணவகத்தை மேம்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.21 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டிருந்தார். சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அம்மா உணவகங்களை மேம்படுத்த தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. 200 கோட்டங்களில், 7 அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 388 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா உணவகம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த திட்டத்தை தொடர்ந்து நடத்தப்படும் என்று அறிவித்ததோடு தற்போது வரை அம்மா உணவகம் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் உணவுகளின் விலை மிகவும் குறைவு என்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் சென்னையிலும் பல்வேறு இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி மேலும் ருசியான புதிய உணவுகளை வழங்க வேண்டும் என்று மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் இதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் உள்ள 391 அம்மா உணவகங்களிலும் பழுதான சமையலறை பொருட்களை மாற்றவும் தற்போது சென்னை மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அம்மா உணவகத்தில் பெயிண்டிங் உள்ளிட்டவற்றையும் மாற்றி சீரமைப்பு பணிகளை தொடங்க சென்னை மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

 

 

The post சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியது மாநகராட்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Corporation ,Chief Minister ,M. K. Stalin ,Amma ,Dinakaran ,
× RELATED சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியுள்ளது மாநகராட்சி!!