×

குன்றக்குடி சண்முகநாதர் கோயில் யானை சுப்புலட்சுமி உயிரிழப்பு

சிவகங்கை: தீடீர் தீ விபத்து காரணமாக குன்றக்குடி சண்முகநாதர் கோவில் யானை சுப்புலட்சுமி(53) நேற்று நள்ளிரவு உயிரிழந்தது. நேற்று முன்தினம் இரவு ஓலையில் தீ பற்றிய விபத்தில் சுப்புலட்சுமி யானைக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த சுப்புலட்சுமி யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தீ விபத்து காரணமாம் குறித்து யானை கொட்டகையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மறைத்த குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமிக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மரியாதை செலுத்தினார்

The post குன்றக்குடி சண்முகநாதர் கோயில் யானை சுப்புலட்சுமி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kunrakudi ,Supulakshmi ,Kunrakudi Sanmuganathar temple ,Ola ,Sanmuganathar Temple ,
× RELATED MS சுப்புலட்சுமி பெயரிலான விருதை பயன்படுத்த தடை