- விருதுநகர்
- அமைச்சு
- முதல்நிலை கல்வி
- அமைச்சர் நலன் சங்கம்
- கல்வித்துறை
- ஆரம்ப கல்வி அதிகாரி
- மாவட்டம்
- தின மலர்
விருதுநகர், செப்.13: இ.எம்.ஐ.எஸ் பணியிலிருந்து விடுவிக்க கோரி கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்கள் விருதுநகர் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சுப்பணியாளர் நலச்சங்கத்தினர் விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில், பள்ளி, அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் தற்போது மிகுந்த பணிச்சுமையில் இருந்து வருகிறோம்.
ஒவ்வொரு நாளும் தாங்கள் கேட்கும் புள்ளி விவரங்களை அவ்வப்போது உடனுக்குடன் வழங்கி வருகிறோம். இந்த சூழ்நிலையில் இ.எம்.ஐ.எஸ் பணியை எங்களுக்கு ஒதுக்கினால் நாங்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனவே தாங்கள் தயவு கூர்ந்து இ.எம்.ஐ.எஸ் பணியிலிருந்து எங்களை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும், தற்போது 2023ம் ஆண்டு பணியில் சேர்ந்த நபர்களுக்கு பணிவரன்முறைப்படுத்துதல், பவானி சாகர் அடிப்படை பயிற்சிக்கு அனுப்புதல் ஆகியவற்றிற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.
The post இஎம்ஐஎஸ் பணியிலிருந்து விடுவிக்க அமைச்சு பணியாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.