- தேசிய டேக்வாண்டோ போட்டி
- ஸ்லோகன் பார்
- திண்டுக்கல்
- அஸ்மிதா டெகுவாண்டோ இரண்டாம் நிலை போட்டி
- ஷரோன் வித்தியாலயா மெட்ரிக் உயர்நிலைப்
- சின்லபதி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆந்திரப் பிரதேசம்
- கர்நாடக
- கேரளா
- மராத்தியம்
- தெலுங்கானா
திண்டுக்கல், செப். 13: சின்னாளப்பட்டியில் உள்ள சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அளவிலான அஸ்மிதா தேக்வாண்டோ இரண்டாம் நிலை போட்டி நடைபெற்றது. நான்கு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மராட்டியம், தெலுங்கானா உள்பட 11 மாநிலங்களை சேர்ந்த 360 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 14 வயது கேடட் பிரிவு, 17 வயது ஜுனியர் பிரிவு, 18 வயது சீனியர் பிரிவு என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதன் துவக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் போட்டியை துவக்கி வைத்தார். இதில் மாநில செயலாளர் செல்வமணி, மாவட்ட தலைவர் சாருவாகன் பிரபு, மாவட்ட துணை தலைவர்கள் நாட்டாண்மை காஜா மைதீன், சாமிநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கமலஹாசன், மாவட்ட செயலாளர் ஜோதிபாசு பயிற்சியாளர் நித்தியா, முதன்மை புரவலர் சர்மிளா தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post சின்னாளபட்டியில் தேசிய டேக்வாண்டோ போட்டி appeared first on Dinakaran.