×

தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நடந்தது நெல் கொள்முதல் பணத்தை தராமல் மோசடி செய்த

திருவண்ணாமலை, செப்.13: திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, பணத்தை தராமல் ஏமாற்றிய நபர்களிடம் இருந்து கொள்முதல் தொகையை பெற்றுத்தர வலியுறுத்தி மனு ெகாடுக்கும் போராட்டம் நடந்தது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில செயலாளர் துளசிநாராயணன், மாவட்ட நிர்வாகிகள் உதயகுமார், அருண்குமார் மற்றும் சிபிஎம் நிர்வாகிகள் வீரபத்திரன், அபிராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் பகுதியில் நம்மாழ்வார் நெல் கொள்முதல் நிலையம் பசுமைச் சங்கம் எனும் பெயரில் ஜெய்கணேஷ் என்பவர் உள்பட சிலர், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து மோசடி செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 216 விவசாயிகளிடம் இருந்து சுமார் ₹2.50 கோடி வரை நெல் கொள்முதல் செய்து பணத்தை தராமல் ஏமாற்றியிருப்பதாக குற்றம் சாட்டினர்.இது தொடர்பாக ஏற்கனவே ஜெய்கணேஷ் என்பவர் ைகது செய்யப்பட்டு்ள நிலையி், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்து, விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியனை சந்தித்து, மனுக்களை அளித்தனர். இது தொடர்பாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்து வரும் நிலையில், விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

The post தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நடந்தது நெல் கொள்முதல் பணத்தை தராமல் மோசடி செய்த appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Thiruvannamalai ,Tiruvannamalai Collector ,Tamil Nadu Farmers' Association ,Dinakaran ,
× RELATED ரூ.1000 உரிமைத்தொகை ஓட்டுக்காக அல்ல...