×
Saravana Stores

விழுப்புரம் கோட்டம் சார்பில் 740 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

விழுப்புரம், செப். 13: விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: வாரஇறுதிநாட்கள், சபமுகூர்த்ததினம், மிலாடிநபி விடுமுறை நாட்களில் பயணிகள் புழக்கம் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுவதால் இன்றும், நாளையும் சிறப்புபேருந்துகள் இயக்கபடுகின்றன. கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவிலான பயணிகள் பயணம் செய்வார்கள் என்பதால் அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு ேபாக்குவரத்து கழகம் சார்பாக கூடுதலாக இன்று 205 மற்றும் நாளை 205 சிறப்புபேருந்துகள் எனமொத்தம் 410 சிறப்புபேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஓசூர், புதுச்சேரிக்கு இசிஆர்வழி, திருவண்ணாமலைக்கு ஆற்காடு, ஆரணி மற்றும் காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக விழுப்புரம் அரசுபோக்குவரத்துகழகம் சார்பில் கூடுதலாக 80 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வாரஇறுதிவிடுமுறை முடிந்து பொதுமக்கள் பல்வேறு இடங்களிலிருந்து மீண்டும் கிளாம்பாக்கம் செல்ல ஏதுவாக 15ம் தேதி 115 சிறப்பு பேருந்துகள், 17ம் தேதி 250 சிறப்புபேருந்துகள் இயக்கப்பட உள்ளன. எனவே பயணிகள் https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து சிறப்புபேருந்துகளை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பயணிகள் கூட்டம் குறையும்வரை தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post விழுப்புரம் கோட்டம் சார்பில் 740 சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Villupuram division ,Villupuram ,Villupuram Division Government Transport Corporation ,Sabamukurthadayam ,Miladinabi ,Klambucham ,Kallakurichi ,Cuddalore ,Chidambaram ,Villupuram Kotam ,
× RELATED விழுப்புரம் விற்பனைக்குழு –...