குடியாத்தம், செப்.13: குடியாத்தம் அருேக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை ஊசி தயாரித்து சப்ளை செய்த சென்ைன வாலிபர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டத்தை போதையில்லா மாவட்டமாக மாற்ற எஸ்பி மதிவாணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் பாகாயம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கடந்த வாரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி எஸ்பி மதிவாணன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி பிருத்விராஜ் சவுகான், இன்ஸ்பெக்டர் நாகராஜன், எஸ்ஐ சிவக்குமார் ஆகியோரின் தலைமையிலான போலீசார் பாகாயம் அடுத்த முல்லை நகர் முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது வேலூர் முத்துமண்டபத்தை சேர்ந்த இளஞ்சிறார்களுக்கு போதை மாத்திரைகளை பைக்கில் வந்த ஒரு வாலிபர் கொடுத்துள்ளார். அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரித்ததில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்(29), கிஷோர்குமார்(19), விக்னேஷ்(19), வேலூர் வேலப்பாடி சிவக்குமார் (38), கஸ்பாவை சேர்ந்த பூபாலன்(27) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதையடுத்து பைக்கில் இருந்த 10 போதை மாத்திரைகள் அடங்கிய 20 பாக்ஸ்களும், பைக்கையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மற்றொரு 4 பேரை போலீசார் ைகது செய்தனர்.
இந்நிலையில், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் வாலிபர்கள் சிலர் அமர்ந்து கொண்டு போதை ஊசி தயாரித்து பயன்படுத்தி வருவதாக டிஎஸ்பி அலுவலகத்திற்கு புகார்கள் சென்றுள்ளது. இதையடுத்து, டிஎஸ்பி ராமச்சந்திரன் உத்தரவின்பேரில், குடியாத்தம் தாலுகா போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸ் வருவதை பார்த்ததும், அங்கு போதை ஊசி பயன்படுத்திக் கொண்டிருந்த 5 வாலிபர்கள் தப்பியோடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், குறிப்பிட்ட சில மாத்திரைகளை மெடிக்கல் ஷாப்பில் வாங்கி வந்து, அதனை தண்ணீரில் கரைத்து, ஊசி மூலம் உடம்பில் செலுத்திக் கொண்டதும், போதை மாத்திரைகளை தயாரித்து பள்ளி மாணவர்களுக்கு சப்ளை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்களிடம் இருந்து 5 மாத்திரை அட்டைகள், 10 ஊசிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கமல்ராஜ்(25), மாரியம்மன்பட்டி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ்(20), அதே பகுதியை சேர்ந்த 18 வயது அரசு கல்லூரி மாணவன், சென்னை பகுதியை சேர்ந்த ஷாம்(19), சாரதி(22) என்பது தெரியவந்தது. இதில் ஏற்கனவே சென்னையைச் சேர்ந்த 2 ேபரும் போதை ஊசி தயாரித்து மாணவர்களுக்கு விற்பனை செய்த பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மூலம் குடியாத்தத்தில் போதை ஊசி தயாரித்து மாணவர்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து 5 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதை ஊசி தயாரித்து பள்ளி மாணவர்களுக்கு சப்ளை செய்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post போதை ஊசி தயாரித்து சப்ளை செய்த வாலிபர்கள் உட்பட 5 பேர் கைது போதை மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல் குடியாத்தம் அருகே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு appeared first on Dinakaran.