×
Saravana Stores

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை வேலூர் போக்சோ கோர்ட் தீர்ப்பு

வேலூர், நவ.14: காட்பாடியில் சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. காட்பாடி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சனவுல்லா(29). இவர் 17 வயதுடைய சிறுமியை காதலிப்பதாக கூறி உள்ளார். மேலும் ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடந்த 2019ம் ஆண்டு ஆந்திரா மாநிலத்துக்கு கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பின்னர் சிறுமியின் பெற்றோர் காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சந்தியா ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சிவக்குமார் தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சனவுல்லாவுக்கு 2 பிரிவுகளில் 12 ஆண்டுகள் சிறை தண்டணையும், ₹40 ஆயிரம் அபராதமும் ஏக காலத்தில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். அதைத்தொடர்ந்து சனவுல்லாவை போலீசார் பலத்த காவலுடன் வேலூர் மத்திய சிறைக்கு வேனில் அழைத்து சென்றனர்.

The post சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை வேலூர் போக்சோ கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Vellore POCSO court ,Vellore ,Katpadi ,Sanaullah ,Gadbadi MGR Nagar ,
× RELATED பழமையான கட்டிடம் சாலையில் இடிந்து...