×

ஆதார் அட்டையை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: ஆதார் ஆணையம் தகவல்

சென்னை: ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இந்தியாவில் முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்நிலையில் ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு ஆதார் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. அதன்படி, ஆதார் வழங்கப்பட்ட தேதியில் இருந்து, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதில் உள்ள தகவல்களை புதுப்பிக்க வேண்டும்.

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதியாக செப்.14ம் தேதி வரை கால அவகாசத்தை ஆதார் ஆணையம் நிர்ணயித்து இருந்தது. அதன்படி மைஆதார் இணையதளத்தில் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்து கொள்ள நாளைதான் கடைசி நாள் என இருந்தது. இதனால் பொதுமக்கள் இலவசமாக புதுப்பிப்பதற்காக கடைசி நேரத்தில் ஆதார் மையங்களில் பொதுமக்கள் குவிந்து வந்தனர்.

இந்நிலையில் ஆதாரை புதுப்பிப்பது குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு டிச.14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், தற்போது ஆதார் ஆணையம் டிச.14ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

The post ஆதார் அட்டையை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: ஆதார் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Aadhaar ,Aadhaar Commission ,Chennai ,India ,Dinakaran ,
× RELATED ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.14 வரை நீட்டிப்பு..!!