×

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் விநாயகர் சிலைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்திய பிரதமர் மோடி : குவியும் கண்டனங்கள்!!

டெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் நடைபெற்ற கணபதி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றது விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களின் டெல்லி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடியை தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் அவர் மனைவி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்த விநாயகர் சிலைக்கு பிரதமர் மோடி ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார். தலைமை நீதிபதி வீட்டில் பிரதமர் மோடி வழிபாடு நடத்திய வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பரவிவருகிறது.

தலைமை நீதிபதி இல்லத்திற்கு பிரதமர் மோடி சென்றதை விமர்சித்திருக்கும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜேய்சிங், நிர்வாகத்திற்கும் நீதித்துறைக்கும் இடையிலான அதிகாரங்களை பிரிப்பதில் தலைமை நீதிபதி சமரசம் செய்து இருப்பதாகவும் சுதந்திரத்தின் மீதான நம்பிக்கையை அவர் இழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செயல்பாட்டிற்கு உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்திரா ஜேய்சிங் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் விநாயகர் சிலைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்திய பிரதமர் மோடி : குவியும் கண்டனங்கள்!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Vinayagar ,Supreme Court ,Chief Justice Chandrasuit ,Delhi ,Modi ,Ganpati ,Pooja ,Chief Justice Chandrasuet ,Vinayagar Chaturthi ceremony ,Chief Justice ,Chandrasuet ,Chandrasut ,
× RELATED இந்தியா தற்போது ஊழலுக்கு...