திருத்தணி, செப். 12: நொச்சிலி நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் புகார் தெரிவிக்க புகார் பெட்டி மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு சொர்ணாவாரி பருவத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் செய்ய 50 பகுதிகளில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், துணை வேளாண்மை அலுவலரிடம் பெறப்பட்ட மகசூல் சான்று, ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் உட்பட நெல்லின் மாதிரி போன்றவற்றுடன் நெல் கொள்முதல் நிலையத்தில் முன்பதிவு செய்து, நெல் விற்பனை செய்து பயன்பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் குறைகள் மற்றும் புகார் தெரிவிக்க நுகர்பொருள் வாணிப கழக தலைமை அலுவலகத்தில் உழவர் உதவி மையத்தை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 3540, தொடர்பு கொள்ளலாம்.
மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர், வேளாண்மை உதவி இயக்குநர் ஆகியோரின் எண்கள், புகார் பெட்டி நேரடி நெள்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் பார்வைக்கு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளிப்பட்டு அருகே நொச்சிலி பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் அரசின் உத்தரவின் படி நெல் கொள்முதல் நிலையத்தில் புகார் பெட்டி வைக்காத நிலையில், கட்டணமில்லா புகார் எண்கள் தொடர்பாக பெயர் பலகை வைக்கப்படாமல், அரசின் விதிமுறைகள் மீறி 40 கிலோ எடைக்கொண்ட மூட்டைக்கு விவசாயிகளிடமிருந்து ₹40 வசூல் செய்து வருவதாக வந்த விவசாயிகள் புகார் தொடர்பாக நேற்று முன்தினம் தினரகன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் டாக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரில் நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் நொச்சிலி நெல் கொள்முதல் நிலையத்தில் நேற்று புகார் பெட்டி அதிகாரிகளை தொடர்புகொள்ள புகார் எண்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மை துறை சார்பில் தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப்ப் எண்களுடன் கூடிய பேனர் வைக்கப்பட்டுள்ளது.
The post நொச்சிலி நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் புகார் பெட்டி, தொலைபேசி எண்கள் பட்டியல் வைப்பு appeared first on Dinakaran.