×

ஊட்டி சூசையப்பர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி பாராளுமன்றம் துவக்கம்

ஊட்டி : ஊட்டியில் உள்ள புனித சூசையப்பர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2024-25ம் ஆண்டுக்கான பள்ளியின் பாராளுமன்றம் துவக்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் முனைவர் அருட்தந்தை பெரியநாயகம் தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக மறை மாவட்ட கவுன்சிலர் ஞானதாஸ் கலந்து கொண்டு புதிய பாராளுமன்றத்தை துவக்கி வைத்தார்.

ஆசிரியர் அமலோற்பவநாதன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அருட்தந்தை ஞானதாஸ் புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பள்ளியின் மாணவ தலைவராக ஆலன் ஜோத்தெம், துணை தலைவராக முகமது யாசிர் பதவியற்றனர். தலைமையாசிரியர் பெரியநாயகம் கிரீடத்தை அணிவித்தார்.

உதவி தலைமையாசிரியர் ஸ்டீபன் ஜெரோம் மாலையணிவித்து கௌரவித்தார். பாராளுமன்ற அமைச்சர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டன. கிரீடத்தை ஆசிரியர் வெங்கடேஸ்வரன் அணிவிக்க, ஆசிரியர் யூபர்ட் அலெக்ஸாண்டர் மாலை அணிவித்தார். உள்துறை அமைச்சர்களாக ரித்தீஷ் குமார் மற்றும் ஆண்டோ அகிலேஷ் தேர்வு செய்யப்பட்டனர். சுற்றுச்சூழல் அமைச்சராக தொபிக் ஆப்ரான், விவசாய அமைச்சராக ரோகித் தேர்வு செய்யப்பட்டார்.

கல்வி அமைச்சராக திலிப், உணவு அமைச்சராக கவுசிக், சுகாதார அமைச்சராக டென்னி கார்மல்ராஜ், பாதுகாப்பு அமைச்சராக ஆனந்தராஜ், விளையாட்டு அமைச்சராக ஹுசைன், காலாச்சார மற்றும் கலை அமைச்சராக ஜெரலின் பிரிட்டோ ஆகியோர் பதவியேற்று கொண்டனர். பல்வேறு அவுஸ் கேப்டன்களுக்கு கிரீடத்தை அருட்பணி அடைக்கலம் அமிர்தராஜ் அணிவிக்க, உடற்கல்வி இயக்குனர் அனஸ்தாஸ் ராஜேஷ் மாலை அணிவித்து கௌரவித்தார்.

ரெட் அவுஸ் கேப்டன் ரித்தீஷ், துணை கேப்டன் பர்வேஸ் உசேன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஒருங்கிணைப்பாளராக ரோஷன் பெர்ஜின், ப்ளூ அவுஸ் கேப்டன் நித்திஷ், துணை கேப்டன் அனிஷ், ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் ராகவேந்திரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். எல்லோ அவுஸ் கேப்டனாக ஹரிஷ், துணை கேப்டனாக தமிழ்குமரன், ஒருங்கிணைப்பாளராக உதயகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கிரீன் அவுஸ் கேப்டனாக, ஜெனோபிஸ் ஜோஷுவா, துணை கேப்டன் ஜோஷ்வா பிரின்ஸ், ஒருங்கிணைப்பாளராக தர்ஷன் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். யூனிட் கேப்டன்களுக்கு மாலை அணிவித்தார் ஆசிரியர் கஜேந்திரகுமார். கிரீடத்தை அணிவித்தார் ஆசிரியர் சகோ ஜெயக்குமார்.

என்சிசி கேப்டனாக வருண், என்எஸ்எஸ் கேப்டனாக வருண், ஜூனியர் ரெட் கிராஸ் கேப்டனாக சூர்யா, ஸ்கவுட் கேப்டனாக லோகேஷ், என்ஜிசி கேப்டனாக சாகுல் அமீது, ஈக்கோ கிளப் கேப்டன் எலியட் ஏபில் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் சதீஷ் அப்புதாஸ், ஸ்டீபன்ஜோகுமார் மற்றும் போஸ்கோ ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில், ஆசிரியை ஷர்மிளா நன்றி கூறினார்.

The post ஊட்டி சூசையப்பர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி பாராளுமன்றம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Parliament ,Ooty Susaiyapar ,High School ,Ooty ,St. Susaiyappa Boys ,Higher Secondary ,School ,Dr. ,Periyanayagam ,Rector ,District Councilor ,Gnanadas ,School Parliament ,Ooty Soosaiyappar ,Dinakaran ,
× RELATED மதுரை எய்ம்ஸ்சுக்கு மட்டும் எப்படி கோளாறு வருகிறது? எம்பி கேள்வி