*மாணவர்கள் தனித்திறனை வெளிப்படுத்த வாய்ப்பு
*கலெக்டர் தகவல்
திருவாரூர் : முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கும் மாணவர்களுக்கு தனித்திறனை வெளிப்படுத்த வாய்ப்பு இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.திருவாரூரில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகளை நேற்று கலெக்டர் சாருஸ்ரீ துவக்கிவைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான திருவாரூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருவாரூர் மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் சாருஸ்ரீ நேற்று துவக்கிவைத்தார்.
மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கூறியதாவது:மாவட்ட விளையாட்டுப்பிரிவு சார்பாக பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. அதன்படி நேற்று பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கபாடி (மாணவர்கள்), கூடைப்பந்து, வளைகோல்பந்து மற்றும் மேசைப்பந்து (மாணவ, மாணவியர்கள்) ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மேலும் நாளை 11ந் தேதி சிலம்பம் (மாணவ, மாணவிகள்), மாணவர்களுக்கான வாலிபால், கால்பந்து மற்றும் இறகுப்பந்து, 12ந் தேதி கபாடி, கால்பந்து, இறகுப்பந்து (மாணவிகள் மட்டும்) மற்றும் தடகளம் மற்றும் நீச்சல் (மாணவ, மாணவியர்கள்), 13ந் தேதி வாலிபால் (மாணவிகள் மட்டும்), ஹேண்ட்பால் மற்றும் கோ-கோ (மாணவ, மாணவிகள்), 14ந் தேதி மாணவர்களுக்கு கேரம், 15ந் தேதி மாணவிகளுக்கு கேரம் மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டுப்போட்டிகள் நடைபெறவுள்ளது.
மேலும் 11ந் தேதி நியூ பாரத் மெட்ரிக் பள்ளியில் செஸ் (மாணவ, மாணவியர்கள்), மற்றும் 14ந் தேதி திரு.வி.க கலைகல்லூரி மைதானத்தில் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியும் நடைபெறவுள்ளது.மாவட்ட அளவில் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு 17 முதல் 25 வயதிற்குட்பட்டவர்களுக்கு வரும் 16ந் தேதி கபாடி (மாணவர்கள் மட்டும்), கூடைப்பந்து, வளைகோல்பந்து, கேரம் மற்றும் மேசைப்பந்து (மாணவ, மாணவியர்கள்) ஆகிய விளையாட்டுகளும், 18ந் தேதி சிலம்பம் மற்றும் கால்பந்து (மாணவ, மாணவியர்கள்) மற்றும் வாலிபால் (மாணவர்கள் மட்டும்), 19ந் தேதி கபாடி (மாணவியர்கள் மட்டும்), தடகளம், நீச்சல் மற்றும் இறகுப்பந்து (மாணவ,மாணவியர்கள்), 20ந் தேதி வாலிபால் (மாணவியர்கள் மட்டும்), ஹேண்ட்பால் (மாணவ, மாணவியர்கள்) ஆகிய விளையாட்டு போட்டிகளும் நடைபெறுகிறது. மேலும் 12ந் தேதி நியூ பாரத் மெட்ரிக் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான செஸ் மற்றும் 21 மற்றும் 22 தேதிகளில் திருவிக கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் (மாணவ,மாணவிகள்) ஆகிய போட்டிகளும் நடைபெறுகிறது.
மாவட்ட அளவில் பொதுப்பிரிவிற்கான வீரர், வீராங்கனைகளுக்கு 15 முதல் 35 வயதிற்குட்பட்டவர்களுக்கு வரும் 18ந் தேதி கேரம், 22ந் தேதி கிரிக்கெட், 23ந் தேதி கபாடி, சிலம்பம், வாலிபால் மற்றும் கால்பந்து,24ந் தேதி தடகளம் மற்றும் இறகுப்பந்து ஆகிய போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகளில் வயது வரம்பின்றி இருபாலர்களுக்கும் வரும் 14ந் தேதி கை, கால் ஊனமுற்றோர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, சக்கர நாற்காலி மேசைப்பந்து, பார்வையற்றோர்களுக்கு -தடகளம், சிறப்பு வாலிபால், மனவளர்ச்சி குன்றியோர்களுக்கு தடகளம், த்ரோபால், செவித்திறனற்றோர்களுக்கு தடகளம் மற்றும் கபாடி ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் வயது வரம்பின்றி இருபாலர்களுக்கும் வரும் 18ந் தேதி கேரம், 21ந் தேதி கபாடி, வாலிபால், தடகளம் மற்றும் இறகுப்பந்து, 12ந் தேதி நியூ பாரத் பள்ளியில் செஸ் போட்டியும் நடத்தப்படவுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் காலை 8 மணிக்கு துவக்கப்படும். மேலும் இணையதளத்தில் போட்டிகளில் கலந்து கொள்ள பதிவு செய்த வீரர்.
வீரங்கனைகள் அட்டவணையில் கண்டுள்ள தேதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக தங்களுடைய இணையதளத்தில் பதிவு செய்த நகல், பள்ளி, கல்லூரிகளில் பயிலுவதற்கான உறுதி சான்றிதழ், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், அரசு ஊழியர்கள் அவர்களின் (நிரந்தரப்பணியாளர்) அடையாள அட்டை நகல் மற்றும் பொதுமக்கள் ஆதார் நகல் மற்றும் இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் வங்கி சேமிப்பு கணக்குப் புத்தக நகலையும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் ஒப்படைத்த பின்னர் தங்கள் வருகையையும் பதிவு செய்திட வேண்டுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சியில் எஸ்.பி ஜெயக்குமார், நகராட்சி தலைவர் புவனப்பிரியாசெந்தில், துணைத்தலைவர் அகிலாசந்திரசேகர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
* மாவட்ட அளவில் பொதுப்பிரிவிற்கான வீரர், வீராங்கனைகளுக்கு 15 முதல் 35 வயதிற்குட்பட்டவர்களுக்கு வரும் 18ந் தேதி கேரம், 22ந் தேதி கிரிக்கெட், 23ந் தேதி கபாடி, சிலம்பம், வாலிபால் மற்றும் கால்பந்து,24ந் தேதி தடகளம் மற்றும் இறகுப்பந்து ஆகிய போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.
* அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் வயது வரம்பின்றி இருபாலர்களுக்கும் வரும் 18ந் தேதி கேரம், 21ந் தேதி கபாடி, வாலிபால், தடகளம் மற்றும் இறகுப்பந்து, 12ந் தேதி நியூ பாரத் பள்ளியில் செஸ் போட்டியும் நடத்தப்படவுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் காலை 8 மணிக்கு துவக்கப்படும்.
The post திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் appeared first on Dinakaran.