மதுரை, செப். 11: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மதுரை நகரில் இந்து அமைப்புகள் உள்ளிட்ட பலரும் பல்வேறு இடங்களில் இரண்டடி துவங்கி பத்து அடி வரையிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டு, ஊர்வலமாக எடுத்து சென்று கரைத்து வருகின்றனர். நகரில் 327 இடங்களில் செப்.9ம் தேதி துவங்கி செப்.13ம் தேதி வரை சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் போலீஸ் அனுமதித்திருந்த நிலையில், பலரும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை தினமும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இமானுவேல் சேகரன் குருபூஜை உள்ளிட்டவைகளுக்கான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் கருதி மதுரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை நாளை, நாளை மறுநாள் (செப்.12, 13) என இருநாட்கள் போலீஸ் பாதுகாப்புடன் நடத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, நேற்றும் இன்றும் ஊர்வலங்கள் நடத்தப்படவில்லை. எனினும் ஆர்வலர்கள் பலரும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று வைகையாற்று நீர்நிலைகளில் நேற்று கரைத்தனர்.
The post விநாயகர் ஊர்வலம் 2 நாள் நடத்த அனுமதி: போலீசார் தகவல் appeared first on Dinakaran.