- வங்கி
- ஆதிராவிடர்
- யுபிஎஸ்சி
- தஞ்சாவூர்
- டாக்டர்
- அம்பேத்கர் அகாடமி மற்றும் முன்னணி பயிற்சி நிறுவன
- சென்னா
- ஆதி திராவிடர்
- தின மலர்
தஞ்சாவூர், செப்.10: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக டாக்டர்.அம்பேத்கார் அகாடமி மற்றும் சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு ஒரு வருட காலம் UPSC தேர்வுக்கான (பொது அறிவு மற்றும் விருப்ப பாடங்கள்) முதல்நிலை முதன்மை நிலை பயிற்சி வழங்கவுள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் (UPSC) தேர்வுக்கு தேர்வு எழுத தகுதியான மாணாக்கர்கள் Screening test தேர்வு செய்யப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களை நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு முதற்கட்டமாக தகுதியுள்ள 100 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியினை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 முதல் 36 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இப்யிற்சியிக்கான கால அளவு ஒரு வருடம் விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவினத் தொகையும் தாட்கோவால் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com < http://www.tahdco.com/ > என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
The post ₹106.26 கோடி மதிப்பில் வங்கி கடனுதவி ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு யுபிஎஸ்சி தேர்வு எழுத பயிற்சி appeared first on Dinakaran.