சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய தனபாலுக்கு எதிராக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மான நஷ்டஈடு வழக்கு செப்டம்பர் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசுவதற்கு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் மாஸ்டர் ஆஜராக இயலாது எனவும், சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று ஆணையராக வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலனை நியமித்து ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. வழக்கறிஞர் ஆணையர் எஸ்.கார்த்திகைபாலன், எடப்பாடி பழனிசாமியின் சாட்சியத்தை பதிவுசெய்து அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், வழக்கறிஞர்கள் வாதத்துக்காக விசாரணையை செப்டம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post கொடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க கோரி இபிஎஸ் வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.