×

200 நாடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

உலக சினிமாவின் உயரிய விழாவாக கருதப்படுவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா. ஆரம்பத்தில் ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே நடத்தப்பட்ட இந்த விழா தற்போது உலகம் முழுக்க விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை சத்யஜித்ரேவுக்கு ஆஸ்கர் சிறப்பு விருது வழங்கப்பட்டது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘காந்தி’ என்ற படம் ஆஸ்கர் விருதுகளை குவித்தது. ‘ஸ்லம்டாக் மில்லினர்’ என்ற ஹாலிவுட் படத்தில் பணியாற்றிய ஏ.ஆர்.ரகுமானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளும், ரசூல் பூக்குட்டிக்கு ஒரு விருதும் கிடைத்தது. இதுதவிர சில ஆவணப்படங்கள் விருதுகளை பெற்றது. சமீபத்தில் நடந்த 95வது விருது வழங்கும் விழாவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக கீராவணி விருது பெற்றார்.

இதுதவிர ‘எலிபண்ட் விஸ்பரஸ்’ என்ற ஆவணப்படமும் விருது பெற்றது. இந்த நிலையில் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 10ம் தேதி நடத்தப்படும் என்று அகாடமி அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடத்தப்படும் என்றும், ஏபிசியின் மூலம் 200 நாடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்திய படங்கள் ஆஸ்கர் விருதுகளை பெறத் தொடங்கி இருப்பதால் இந்திய ரசிகர்களும் ஆஸ்கர் விருதை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

The post 200 நாடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : 96th Academy Awards ,Oscar Awards Ceremony ,Hollywood ,India ,Satyajitre ,Mahatma Gandhi ,Oscars ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹாலிவுட்டின் குரல் மன்னன் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் மரணம்