×
Saravana Stores

செட்டிநாடு வெஜிடபிள் குருமா

தேவையான பொருட்கள்:

காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி) – 1 1/2 கப்
மல்லித் தூள் – 3 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 3
பட்டை – 1 துண்டு
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் – 400 மிலி
கிராம்பு – 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்த தாளிக்க வேண்டும்.பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அடுத்து அதில் காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கிளறி விட வேண்டும்.பின் அதில் ஒரு கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 7-8 நிமிடம் காய்கறிகள் வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் தேங்காய் பாலை சேர்த்து கிளறி, குறைவான தீயில் ஒரு கொதி விட்டு இறக்கினால், செட்டிநாடு வெஜிடேபிள் குருமா தயார்.

The post செட்டிநாடு வெஜிடபிள் குருமா appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் பலி