×
Saravana Stores

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் பாராலிம்பிக் நிறைவு


பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 17வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28ம்தேதி தொடங்கிநடந்து வந்தது. இதில் 170 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். மொத்தம் 22 வகையான விளையாட்டுகள் நடத்தப்பட்டன. .கடந்த 2 வாரங்களாக நடைபெற்ற பாராலிம்பிக் தொடர் நேற்று இரவுடன் நிறைவடைந்தது. இதில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று பட்டியலில் 18வது இடத்தை பிடித்தது. நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை பாரிசில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடந்தன.

கண்கவர் கலை நிகழ்ச்சி, நடனம், சாகசங்களுடன் நிறைவு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் வீரர், வீராங் கனை அணிவகுப்பில் இந்திய அணிக்கு வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங், ஓட்டப்பந்தய வீராங்கனை பிரீத்தி பால் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றனர். பின்னர் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு , ஒலிம்பிக் கொடி 2028ம் ஆண்டு பாராலிம்பிக்கை நடத்தும் லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் பாராலிம்பிக் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Paralympics ,PARIS ,17TH PARALYMPIC SERIES ,PARIS, FRANCE ,Paralympic ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…