×

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சஞ்சய் என்ற 3 வயது சிறுவன் கொலை..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் 3 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் விக்னேஷ் ரம்யா தம்பதியரின் ஆண் குழந்தை சஞ்சய் இன்று வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவன் திடீரென திடீரென மாயமாகியுள்ளான்.

இதையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பெற்றோர்கள் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் எதிர்வீட்டினை சேர்ந்த தங்கம்மாள் என்ற பெண் முன் விரோதம் காரணமாக சிறுவனை கொன்று சாக்கு மூட்டையில் போட்டு வைத்தது தெரியவந்தது.

தனது மகன் விபத்தில் இறந்ததற்கு சிறுவன் வீட்டினர் செய்வினை வைத்ததே காரணம் என நினைத்து கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். தங்கம்மாளின் மகன் அண்மையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அதற்கு பழிவாங்க இதனை செய்துள்ளார். போலீசார் அந்த பெண்மணியை கைது செய்து மேற்கொண்டு விசாரனை நடத்தி வருகின்றார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சஞ்சய் என்ற 3 வயது சிறுவன் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Sanjay ,Radhapuram ,Nella district ,Nella ,Nella district Radhapura ,Vignesh Ramya ,Athukurichi ,Radhapura, Nella district ,Nella district Radhapuram ,Dinakaran ,
× RELATED மிகப்பெரிய பொறுப்பு : ரிசர்வ் வங்கி...