காரகஸ்: வெனிசுலாவில் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இதில், எதிர்க்கட்சி வேட்பாளர் எட்மண்டோ கோன்சாலஸ் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அதிபராக இருக்கும் நிகோலஸ் மதுரோ 3வது முறையாக அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் மதுரோவின் வெற்றியை அங்கீகரிக்கவில்லை. இந்த நிலையில், முன்னாள் எதிர்க்கட்சி அதிபர் வேட்பாளர் எட்மண்டோ கோன்சாலஸ் ஸ்பெயினில் தஞ்சம் அடைந்துள்ளார் என நாட்டின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
The post வெனிசுலா முன்னாள் எதிர்க்கட்சி அதிபர் வேட்பாளர் ஸ்பெயினில் தஞ்சம் appeared first on Dinakaran.