×
Saravana Stores

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி இலங்கை புதிய பிரதமர் நாளை நியமனம்: அதிபர் அனுர குமார அறிவிக்கிறார்

கொழும்பு: இலங்கையில் நாளை புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை அதிபர் அனுர குமார திசநாயக நாளை நியமிக்க உள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இலங்கையில் செப்டம்பர் 21ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயக வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து இலங்கையின் புதிய அதிபராக திசநாயக பதவியேற்றார். பின்னர் செப்டம்பர் 24ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

கடந்த 14ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 69 சதவீத வாக்குகளை பெற்று அனுர குமார திசநாயக்காவின் என்பிபி கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. யாழ்பாணத்தில் என்பிபி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் என்பிபி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் எந்த மசோதாவையும் ஆளும்கட்சி எளிதாக நிறைவேற்றமுடியும். நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை அடுத்து நாளை(திங்கட்கிழமை) புதிய பிரதமரை அதிபர் திசநாயக நியமிக்கிறார்.

மேலும் அமைச்சரவையும் நியமனம் செய்யப்பட உள்ளது. இது குறித்து என்பிபி மூத்த செய்தி தொடர்பாளர் தில்வின் சில்வா கூறுகையில்,‘‘திங்களன்று அமைச்சரவையை நியமனம் செய்கிறோம். இதில் அதிகபட்சம் 25 பேர் இடம்பெறக்கூடும். 23 அல்லது 24ஆகவும் இருக்கலாம். அமைச்சர்களுக்கான துறைகள் விஞ்ஞான ரீதியாக ஒதுக்கீடு செய்யப்படும்.இலங்கைஅரசியலமைப்பின் 46வது பிரிவின்படி மொத்த கேபினெட் அமைச்சர்களின் எண்ணிக்கையானது 30ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. துணை அமைச்சர்களின் எண்ணிக்கை 40க்கும் மிகாது” என்றார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி இலங்கை புதிய பிரதமர் நாளை நியமனம்: அதிபர் அனுர குமார அறிவிக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,President ,Anura Kumara ,Colombo ,Sri Lanka's National People's Power ,Anura Kumara Dissanayake ,National People's Power ,Dinakaran ,
× RELATED இலங்கை நாடாளுமன்ற தேர்தல் : ஆளும்...