×

தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி 2 பக்தர்கள் பலி ; 3 பேரை தேடும் பணி தீவிரம்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா தேர்பவனி இன்றிரவு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னை எழும்பூர் நேரு பார்க் அருகே உள்ள ஹவுசிங் யூனிட்டில் குடியிருந்து வரும் சார்லஸ் மகன்கள் பிராங்க்ளின்(23), ஆண்டோ(20) மற்றும் அவரது நண்பர்களான கிஷோர்(20), கலையரசன்(20), மனோகரன்(19) ஆகியோர் இன்று திருக்காட்டுப்பள்ளிக்கு வந்தனர்.

பின்னர் காலை 11.30 மணியளவில் பேராலயத்தில் இருந்து ஒன்றரை கிமீ தொலைவில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு 5 பேரும் குளிக்க சென்றனர். நீச்சல் தெரியாத 5 பேரும், ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒவ்வொருவராக தண்ணீரில் மூழ்கினர். வெகுநேரமாகியும் 5 பேரும் கரைக்கு வராததால் அங்கு குளித்து கொண்டிருந்த பொதுமக்கள் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் ெதரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தேடினர். அரை மணி நேர தேடுதலுக்கு பிறகு பிராங்க்ளின், ஆண்டோ ஆகியோரது உடல்களை மீட்டனர். மேலும் 3 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி 2 பக்தர்கள் பலி ; 3 பேரை தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Tanjore ,Mother Mary ,Therpavani ,Poondi Matha Church ,Tirukattupalli ,Thanjavur ,Charles ,Nehru Park, Egmore, Chennai ,
× RELATED தஞ்சை அருகே மது விற்றவர் கைது