கீழக்கரை, செப். 7: ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, திருப்புல்லாணி, மண்டபம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகளவில் உள்ளது. இதில், கீழக்கரை, பெரியபட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் விளையும் தேங்காய் நாட்டின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இப்பகுதிகளில் காய வைக்கப்படும் கொப்பரைகளுக்கு தமிழகத்தின் எண்ணெய் தொழிற்சாலைகளில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் கீழக்கரையில் போதிய மழையின்மை, பெரும்பான்மையான நீர்நிலைகள், தென்னந்தோப்புகள் அழிக்கப்பட்டு மனைநிலங்களாக மாற்றப்பட்டது. இதனால் தென்னை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்து 4 ஆண்டுகளுக்கு முன் எண்ணிக்கை கணக்கில் விற்கப்பட்டு வந்த தேங்காய் கடந்த சில ஆண்டுகளாக கிலோ அடிப்படையில் விற்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு முன் 1 கிலோ தேங்காய் ரூ.25க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது இதன் விலை படிப்படியாக அதிகரித்து தற்போது 1 கிலோ தேங்காய் ரூ.40க்கு விற்கப்படுகிறது.
The post கீழக்கரையில் தேங்காய் விலை ‘கிடுகிடு’ appeared first on Dinakaran.