- மீனாட்சி மிஷன் மருத்துவமனை
- தென் தமிழகம்
- மதுரை
- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை
- ஆய்வு கூடம்
- கிளி ரோபோ
- தின மலர்
மதுரை, செப். 7: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் 350 ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்திருப்பதால் பெருமிதம் கொள்கிறது. இதன்படி 2018ம் ஆண்டில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ‘கிளி ரோபோ’ அறிமுகப்படுத்தப்பட்டது. அதுமுதல், ரோபோடிக் அறுவை சிகிச்சை திறன்களை மேம்படுத்தி தென் தமிழ்நாட்டிலேயே இந்த மைல்கல்லை முதலில் எட்டிய மருத்துவமனை என்ற பெயரை பெற்றுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகளில் மருத்துவமனை குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. பொது அறுவை சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, பெண்ணோயியல், தலை மற்றும் கழுத்து மற்றும் தொராசி செயல்முறைகளில் ரோபோடிக் அறுவை சிகிச்சை பயன்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவத் தொழில்நுட்பத்தின் எல்லைகளைத் தொடும் அறுவை சிகிச்சைக் குழுவின் அயராத முயற்சியும், தளராத அர்ப்பணிப்பும் இந்த சாதனையை சாத்தியமாக்கி உள்ளது.
இதற்கு காரணமான அறுவை சிகிச்சை நிபுணர் குழுவில் டாக்டர்கள் ரமேஷ் அர்த்தநாரி, மகாராஜன், பத்மா, மோகன், ஜெகதீஷ் சந்திரபோஸ், சீனிவாசன், விஜய பாஸ்கர், மற்றும் பால் வின்சென்ட் ஆகியோர் உள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ரோபோடிக் அறுவை சிகிச்சையில் தொடர்ந்து சாதனைகள் புரிந்து, நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்வதுடன், உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவையை வழங்குவதில் உறுதியுடன் உள்ளது.
The post மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரோபோடிக் அறுவை சிகிச்சையில் சாதனை: தென் தமிழகத்தில் முதலிடம் பிடித்தது appeared first on Dinakaran.