×

ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் காங்.கில் ஐக்கியம்

புதுடெல்லி: டெல்லியில் ஆம்ஆத்மி அரசின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம். இவர் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நேற்று விலகினார். இது தொடர்பாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், ‘ ஆம் ஆத்மியில் சமூக நீதி மற்றும் சமத்துவம் போன்றவை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

அம்பேத்கரை பின்பற்றும் நான் அந்த கட்சியில் சமூக நீதிக்காக எதையும் செய்ய முடியாது. தலித்துகள், சிறுபான்மையினருக்கு எந்த முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு எதிரான பாகுபாடுதான் நடக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். ராஜேந்திர பால் கவுதம் நேற்று காங்கிரசில் சேர்ந்தார்.

 

The post ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் காங்.கில் ஐக்கியம் appeared first on Dinakaran.

Tags : Aam Aadmi Party ,Congress ,New Delhi ,Rajendra Pal Gautam ,AAP government ,Delhi ,Arvind Kejriwal ,
× RELATED டெல்லி பேரவை தேர்தலில் ஆம்ஆத்மி...