சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வில் (குரூப் 1 பதவி) அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் முதன்மை எழுத்து தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள் 6ம் தேதி (நேற்று) முதல் வருகிற 16ம் தேதி வரை தங்களது மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் ஓடிஆர் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
முதனிலை எழுத்துத் தேர்விற்கு தேர்வு கட்டண விலக்கு கோராத அனைவரும் முதன்மை தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.200 செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசம், சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே முடிவடைவதால் தேர்வர்கள் வருகிற 15ம் தேதிக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
The post குரூப் 1 தேர்வு மூலச் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.