×
Saravana Stores

வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானை தந்தம் திருடிய 4 பேர் கைது

சென்னை: வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்களை அங்கு வேலை செய்து வந்த தற்காலிக பணியாளர் ஒருவர் கடந்த மாதம் 25ம் தேதி திருடியதாக தெரிய வந்தது. இதுகுறித்து தமிழ்நாடு வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவினரும், தாம்பரம் வனச்சரக அலுவலகமும் இணைந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி அருகே 4 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 2 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட யானை தந்தங்கள் முழுமையாக வளர்ந்த யானையுடைய தந்தங்கwf இல்லை. ஒரு தந்தம், ஒரு அடிக்கு மேல் அளவுள்ளது எனவும், மற்றொன்று பெண் யானையின் தந்தம் எனவும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றிய சாதாரண ஊழியரான அப்பு (எ) சதீஷ் என்பவரிடம் இருந்து இந்த தந்தங்களை பெற்றதாக பிடிபட்ட 4 பேரும் தெரிவித்தனர். இதனால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஊழியர் சதீஷ், யானைத் தந்தங்களை திருடிச் சென்றிருக்கலாம் என தெரிய வந்தது. விசாரணையில், தொழிலாளி சதீஷ் யானை தந்தம் கடத்தலில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானை தந்தம் திருடிய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Vandalur zoo ,CHENNAI ,Vandalur Anna Zoo ,Tamil Nadu Wildlife Crime Control Unit ,Thambaram ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில்...