- யுஎஸ் ஓபன் டென்னிஸ்
- ஜெசிகா
- நியூயார்க்
- அமெரிக்க ஓப்பன் கிராண்ட் ஸ்லாம்
- நியூயார்க் நகரம்
- இகா சுவாதேக்
- போலந்து
- அமெரிக்கா
- தின மலர்
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் நேற்று காலிறுதி ஆட்டங்கள் நடந்தன. பெண்கள் ஒற்றையர் பிரிவு கடைசி காலிறுதியில் உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை போலாந்தின் இகா ஸ்வியாடெக்(23வயது, 1வது ரேங்க்), அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா (30வயது, 6வது ரேங்க்) ஆகியோர் மோதினர். எதிர்பார்ப்புக்கு மாறாக பெகுலா 6-2, 6-4 என்ற நேர் செட்களில் எளிதில் வென்றார். அதன் மூலம் யுஎஸ் ஓபனில் மட்டுமின்றி கிராண்ட ஸ்லாம் போட்டி ஒன்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் ஒரு மணி 28நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு கடைசி காலிறுதியில் நேற்று உலகின் நெம்பர் ஒன் வீரர் இத்தாலியின் ஜானிக் சின்னர்(23வயது, 1வது ரேங்க்), ரஷ்யாவின் டானில் மெத்ேவதேவ்(28வயது, 5வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர்.
அதில் முன்னாள் சாம்பியன் மெட்ேவதேவை 2மணி 39 நிமிடங்களில் 6-2, 1-6, 6-1, 6-4 என்ற செட்களில் சின்னர் போராடி வென்றார். இந்த வெற்றியின் மூலம் சின்னர் முதல்முறையாக யுஎஸ் ஓபன் அரையிறுதியில் களம் காண இருக்கிறார். இன்று நடைபெறும் பெண்களுக்கான அரையிறுதியில் எம்மா நவரரோ (அமெரிக்கா)-அரினா சபலென்கா(பெலாரஸ்), ஜெசிகா பெகுலா-கரோலினா முச்சோவா(செக் குடியரசு) ஆகியோர் விளையாடுகின்றனர். நாளை நடைபெறும் ஆண்களுக்கன ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்களில் ஜானிக் சின்னர்(இத்தாலி)- ஜாக் டிராப்பர்(பிரிட்டன்), அமெரிக்க வீரர்கள் டெய்லர் ஃபிரிட்ஸ்- பிரான்சிஸ் டியாஃபோ ஆகியோர் மோதுகின்றனர். இதில் வெற்றிப் பெறுபவர்கள் முதல் முறையாக யுஎஸ் ஓபன் பைனலில் களம் காணுவார்கள்.
The post யுஎஸ் ஓபன் டென்னிஸ்; முதல் அரையிறுதியில் ஜெசிகா appeared first on Dinakaran.