- ஷேக் ஹசினா
- இந்தியா
- பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம்
- டாக்கா
- பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம்
- வங்காளம்
- பிரதமர்…
டாக்கா: ஷேக் ஹசீனா அரசியல் கருத்துகளை வௌியிடாமல் இருக்க வேண்டும் என வங்கதேச இடைக்கால அரசு எச்சரித்துள்ளது. வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்கும் முடிவை எதிர்த்து மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். ஷேக் ஹசீனா வங்கதேச அரசியல் தொடர்பான சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டாக்காவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முகமது யூனுஸ், “வங்கதேசத்துக்கும், இந்தியாவுக்கும் நல்ல நட்புறவு நீடிக்கிறது. இந்தியாவில் தஞ்சம் சென்றுள்ள ஹசீனா அங்கிருந்து கொண்டு அரசியல் விஷயங்களை பேசுவது யாருக்கும் ஏற்புடையதாக இல்லை. அது இந்தியா, வங்கதேச உறவை பாதிக்கும். ஷேக் ஹசீனா அரசின் அட்டூழியங்களுக்கு எதிராக வங்கதேச மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக அவர் மீண்டும் வங்கதேசம் அழைத்து வரப்படுவார். வங்கதேசம் ஹசீனாவை திரும்ப அழைத்து வரும் வரை அவர் அமைதியாக இருக்க வேண்டும்” என எச்சரித்துள்ளார்.
The post அரசியல் கருத்துகளை சொல்வது நட்புறவை பாதிக்கும் ஷேக் ஹசீனா இந்தியாவில் அமைதியாக இருக்க வேண்டும்: வங்கதேச இடைக்கால அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.