- சஹாரா குழுமம்
- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன் லிமிடெட்
- சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்
- Versova
- மும்பை
- தின மலர்
புதுடெல்லி: மும்பையில் உள்ள வெர்சோவாவில் சஹாரா குழும நிறுவனங்களான சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 12.15 மில்லியன் சதுர அடி நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம்.சுந்தரேஷ், பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,’ 10 வருடங்களாக நீடிக்கும் இந்த பிரச்னையை தீர்க்க அடுத்த 15 நாட்களுக்குள் ரூ. 1,000 கோடியை எஸ்க்ரோ கணக்கில் வரவு வைக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை நடக்கும்’ என்று தெரிவித்து வழக்கை அடுத்த மாதம் ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் 2012ல் ரூ. 25,000 கோடியை டெபாசிட் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஹாரா நிறுவன தலைவர் சுப்ரதா ராய் 2023 நவம்பரில் மும்பை மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post அடுத்த 15 நாட்களில் ரூ.1000 ேகாடி டெபாசிட் செய்ய சஹாரா குழுமத்திற்கு உத்தரவு: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.