×
Saravana Stores

தரமற்ற உள்கட்டமைப்பு பணிகளால் விபத்துகள் நிகழ்வதாக நிதின் கட்கரி பேச்சு : அமைச்சர்கள் கையெழுத்து மட்டும் போடுவதே ராமராஜ்யம் என கேலி!!

டெல்லி : தரமற்ற உள்கட்டமைப்பு பணிகளால் விபத்துகள் நேரிடுவதாக கூறியுள்ள ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, ராமராஜ்ஜியத்தில் அமைச்சர்கள் கையெழுத்து மட்டுமே போடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் சுரங்கபாதைகள் அமைப்பது என்ற தலைப்பில் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சாலை பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதில் குறைபாடுகள் காரணமாகவே சுரங்கங்கள் இடிவது போன்ற விபத்துகள் நேரிடுவதாக தெரிவித்தார்.

இத்தகைய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிறுவனங்களை ஒய்வுபெற்ற அரசு அதிகாரிகள் நடத்துவதாக குறிப்பிட்ட அவர், பணியிடத்திற்கு சென்று ஆய்வு செய்யாமல் வீடுகளில் இருந்தபடி, கூகுள் பார்த்தே அவர்கள் அறிக்கையை தயாரிப்பதாக கூறினார். இந்த வார்த்தையை கூற கூடாது என்றாலும் அவர்களை குற்றவாளிகள் என்று தான் கூற வேண்டும் என்றும் நிதின் கூறினார். தொழில்நுட்ப ரீதியான விஷயங்களை அமைச்சர்கள் புரிந்துக் கொள்ள முடியாது என்ற அவர், திட்ட அறிக்கையின் அடிப்படையில் தான் ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கப்படுவதாகவும் கூறினார். அரசை நடத்துபவர்களுக்கு அதிகாரிகள் தான் வழிகாட்டிகள் என்ற அவர், அவர்கள் தயாரிக்கும் கோப்புகளில் என்ன எழுதி இருந்தாலும் உயர் அதிகாரி கையெழுத்திடுவது போலவே அமைச்சர்களும் கையெழுத்திட்டு தான் ராமராஜ்ஜியம் நடைபெறுகிறது என்றார்.

The post தரமற்ற உள்கட்டமைப்பு பணிகளால் விபத்துகள் நிகழ்வதாக நிதின் கட்கரி பேச்சு : அமைச்சர்கள் கையெழுத்து மட்டும் போடுவதே ராமராஜ்யம் என கேலி!! appeared first on Dinakaran.

Tags : Nitin Gadkari ,Ramrajyam ,Delhi ,Union Minister ,Ram Rajya ,India ,Federation of Indian Trade Unions ,Dinakaran ,
× RELATED மதுரவாயல்-காஞ்சிபுரம்...