×

கல்விக்கடன் விழிப்புணர்வு முகாம்

திருவாரூர், செப். 5: திருவாரூர் மாவட்டம் அம்மையப்பனில் கல்விக்கடனுக்கான விழிப்புணர்வு முகாம் நாளை நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார், இதுகுறித்து கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முதன்மை வங்கி இணைந்து நாளை காலை 10 மணி முதல் அம்மையப்பன் குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்விக்கடனுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. மேற்படி கல்விக்கடன் முகாமில் அனைத்து வங்கியாளர்கள் கலந்துகொண்டு கல்விக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் வங்கி கடன் பெறுவதற்கு தகுதியானவரா? என்பதை உறுதிசெய்வதற்கு ஏதுவாக மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி கல்வி கட்டண விவரம், ஆதார் அட்டை, பான் கார்டு ஆகிய ஆவணங்களுடன் பெற்றோர்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

The post கல்விக்கடன் விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Loan Awareness Camp ,Tiruvarur ,Ammaiyappan ,Tiruvarur district ,Saru ,loan ,
× RELATED இளையோர் கலை விழாவில் கட்டிமேடு அரசு பள்ளி மாணவர் மாநில போட்டிக்கு தேர்வு